சமுதாயத்தில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு இரு முக்கிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் விடுதலையாவதும், நிகழ்ந்த குற்றம் குறித்து நடத்தப்படும் புலன்விசாரணையின் தரம் குறைந்து வருவதும் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.

சிலந்தி வலை:

‘சிறிய பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு, குளவி போன்ற பெரிய பூச்சிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கும் சிலந்தி வலை போன்றது சட்டம்’ என்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில எழுத்தாளர் ஜோனாதன் ஸ்விப்ட் கூறிய இந்த கருத்து இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

சட்ட ரீதியான சவால்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஏழைகளாக இருப்பவர்கள் மீதான குற்ற வழக்குகள் பெரும்பாலும் தண்டனையில் முடிவடைகின்றன. பணபலமும், சமுதாயத்தில் செல்வாக்கும் உள்ளவர்கள் சட்டத்திலுள்ள நெளிவு சுளிவுகளில் பயணித்து, தங்களைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்கின்றனர்.

தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் ஆய்வின்படி, 2019-ம் ஆண்டில் நம்நாட்டில் 32,25,701 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு,  புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 67.2% வழக்குகளில்தான் குற்றப் பத்திரிக்கைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்ற வழக்குகளில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. சில வழக்குகள் பிழையானவை என முடிவு செய்யப்பட்டுள்ளன.   

நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகளில் 50.4% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மற்ற வழக்குகள் விடுதலை அடைந்துள்ளன. நீதிமன்றங்களில் தண்டனையில் முடிவடைந்த பல வழக்குகள் மேல்முறையீட்டில் விடுதலை அடைந்துள்ளன. அது குறித்த புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் இல்லை.

விடுதலையாகும் வழக்குகள்:

மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும் கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் தொடர்பான குற்ற வழக்குகளில் எத்தனை வழக்குகள் நம்நாட்டில் தண்டனையில் முடிவடைகின்றன?

2019-ம் ஆண்டில் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளின் எண்ணிக்கை 28,918.  நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் 6,961 கொலை வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.     

2019-ம் ஆண்டில் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 32,033.  நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் 4,640 பாலியல் பலாத்கார வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

2019-ம் ஆண்டில் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கலவர வழக்குகளின் எண்ணிக்கை 46,209.  நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் 5,207 கலவர வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

2019-ம் ஆண்டில் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்ட காய வழக்குகளின் எண்ணிக்கை 5,45,061. நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் 2019-ம் ஆண்டில் 61,243 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் நான்கில் ஒரு வழக்கும், பாலியல் பலாத்கார வழக்குகளில் இருபதில் மூன்று வழக்குகளும், கலவரம் மற்றும் காய வழக்குகளில் பத்தில் ஒரு வழக்கும்தான் நீதிமன்ற விசாரணையில் தண்டனை அடைகின்றன. கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டாலும், அந்த குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு குற்றவாளிகள் நம்நாட்டில் உலவி வருகின்றனர் என்ற தகவலைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

கவனத்தை ஈர்க்கும் வழக்கு:

தண்டனையில் முடிவடையும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து நிகழ்த்திய ஆய்வின் பொழுது, ஒரு வித்தியாசமான வழக்கு கவனத்திற்கு வந்தது.

2012-ம் ஆண்டில் சென்னை புறநகரில் நிகழ்ந்த வழக்கு ஒன்றில் பூ வியாபாரம் செய்து வந்த ஒரு பெண் ஒரு மாலை பொழுதில் ரயில் பாதை அருகில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் சம்பவ இடத்திலே கொலை செய்யப்பட்டாள். குற்றவாளி பிடிபட்டான். அவனிடமிருந்து இறந்துபோன பெண்ணின் செல்போன் புலன்விசாரணையில் கைப்பற்றப்பட்டது. அக்குற்றவாளி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டால், அவனைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். அதற்கு ‘அடிப்படை வழக்கு (Ground Case)’ ஒன்று தேவைப்படும். நம்பிக்கையான ஒருவரிடம் புனையப்பட்ட புகார் ஒன்றைப் போலீசார் பெற்று, அடிப்படை வழக்கு ஒன்றைப் பதிவு செய்து, அதன் அடிப்படையில் அந்த குற்றவாளியைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. இது தொடர்பான சட்டப் பிரச்சினைகள் குறித்து பின்னர் பார்ப்போம்.

பூக்காரியைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்த குற்றவாளி மீது போடப்பட்ட அடிப்படை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபணமானது. குற்றவாளிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  அவன் செய்த கொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு வந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த வழக்கு விடுதலையானது. உண்மையான வழக்கு விடுதலை அடைவதும்,  புனையப்பட்ட வழக்கு தண்டனை அடைவதும் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ள நம்நாட்டில், எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை?  குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்படவில்லை?  என்ற கேள்விகள்தான் பொதுவெளியில் அதிக அளவில் எழுப்பப்படுகின்றன. பரபரப்பாகப் பேசப்பட்ட ஓரிரு வழக்குகளைத் தவிர்த்து, ஏனைய வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீதான வழக்குகள் குறித்து அதிக அளவில் யாரும் குரல் கொடுப்பதில்லை.  பல வழக்குகளில் புகார் கொடுத்தவர்களே நீதிமன்ற விசாரணை மீது ஆர்வம் காட்டாமல் அமைதியாகிவிடுகின்றனர்.

குற்ற நிகழ்வு:

குற்றவாளிகளைக் கைது செய்வதோடு தங்களது முக்கியமான பணி முடிவடைந்துவிடுகிறது என்ற உணர்வு காவல்துறையில் நிலவிவருகிறது. குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யப் போதிய ஆதாரங்கள் சேகரிப்பதில் காவல்துறையினர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்ற கருத்தும் பல வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் விடுதலை அடைவது நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுப்பதோடு, குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான மன தைரியத்தையும் கொடுக்கிறது.

‘குறி நோக்கி சுடுதல்’ என்று கூறுவது உண்டு. அது போன்று, குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும் தண்டனையில் முடியும் வகையில் புலன் விசாரணை அமையப் பெறவேண்டும். அது முடியுமா?  தரமான புலன் விசாரணைக்கு அப்பாற்பட்டு நிகழும் செயல்களால் வழக்குகள் விடுதலையாகிவிடுகின்றனவே? போன்ற கேள்விகளை முன்னிலைப் படுத்தாமல், தரமான புலன் விசாரணை மேற்கொள்ளும் நிலையை நோக்கி காவல்துறை முன்னேறிச் சென்றால், குற்றங்கள் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்த நிலை.    

அதிகமான கல்வித் தகுதி உள்ளவர்கள் பலர் தற்பொழுது காவல்துறை பணியில் சேர்கின்றனர். அவர்களால் சட்ட நுணுக்கத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்; புலன் விசாரணையைத் திறமையுடன் மேற்கொள்ளவும் முடியும். முறையான வழிகாட்டுதலும், பயிற்சியும்தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

தினசரி பணிகளில் அதிகக் கவனம் செலுத்தும் காவல்துறை உயரதிகாரிகள், குற்றப் புலன் விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் முன்னேற்றம் போன்றவைகளைக் கண்காணிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை என்றும், அப்பணிகளுக்குப் போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் காவலர்களை நியமிப்பதில்லை என்றும், புலன் விசாரணைக்கென ஒதுக்கப்படும் நிதியை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் களப்பணியில் இருக்கும் காவல்துறையினரின் முணுமுணுப்பைப் புறந்தள்ளிவிடவும் முடியாது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் காவல்துறைக்கு உள்ள பொறுப்புணர்வைப் போன்று குற்ற வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பொறுப்பு உண்டு. பல்வேறு காரணங்களால் அவர்களும் அவர்களது பணியை முழுமையாகச் செய்ய இயலாத நிலையும் குற்றவாளிகள் எளிதில் விடுதலை ஆவதற்கும், அதன் நீட்சியாக சமுதாயத்தில் குற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

சமுதாயத்தில் குற்றங்கள் நிகழ்வதற்கான புறக்காரணங்கள் பல இருந்தாலும், வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போன்று, குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல்துறையினரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தாத சூழல்; காவல்துறையை வழி நடத்தும் உயர் அதிகாரிகளே பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழல்; இந்த தவறான போக்கைக் கண்டும் காணாமல் இருந்து வரும் அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படாதவரை சமுதாயத்தில் குற்ற நிகழ்வுகள் குறையாது. காவல்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

***

Previous post மாற்றப்பட வேண்டிய மாற்றங்கள்
Next post தனியார் துப்பறிதல் முறைபடுத்தப்படுமா ?

18 thoughts on “தேவை காவல்துறையின் சுயபரிசோதனை

  1. 👌👌👌👏👏👏🙏🙏🙏
    காவல்துறை மட்டுமல்ல சமூக அக்கரையோடு ஒவ்வொரு மக்களும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

  2. ஐயா,
    தங்களின் ஆராய்ச்சிக் கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவதில் காவல்துறை நீதித்துறை மட்டுமின்றி பல துறைகளும் இதில் ஈடுபட்டுள்ளது.
    ஆனால் காவல்துறையின் மீது அதிகமாக சுமை சுமத்தப்படுகிறது. தாங்களும் பல துறைகளை குறித்து தெரிவித்துள்ளீர்கள், ஆனால் இறுதியில் மற்ற துறைகளை விட்டுவிட்டு காவல் துறையை மட்டும் குறை கூறி முடித்துள்ளீர்கள்.

  3. காவல்துறையினர் மட்டுமின்றி ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.ஆனால் துரிதிஷ்டவசமாக பெரும்பான்மையோர் தம்மைதவிர பிறர்மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் இயங்குகிறார்கள்.
    அருமையான காலத்திற்கேற்ற கட்டுரை.

  4. கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் அருமை/உண்மை. பல சூழ்நிலைகளில் ஆர்வத்துடன் குற்றச் செயல்கள் குறித்தும், குற்றங்களை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டும் இளம் தலைமுறை காவலர்களும் ஆரம்பநிலை அதிகாரி(உதவி ஆய்வாளர்கள்)களும் பல சூழ்நிலைகளில் சில அதிகாரிகளால் அவமானங்களுக்கு உள்ளாவதும் தடுக்கப்பட்டால்… இந்தநிலை உறுதியாக மாறும்…

  5. அய்யா வணக்கம் 🙏

    கட்டாயம் காவல் துறையினர் சுய பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதே சமயம் சமுதாயத்தில் உள்ள குற்றங்களை தடுக்க வேண்டிய கட்டாய பொறுப்பு காவல் துறையினருக்கு மட்டும் தான் உள்ளது என்றால் நம்மோடு சேர்ந்து பயணிக்கும் மிக முக்கிய துறையாக உள்ள நீதிமன்றங்கள் இந்தியாவின் பெரும்பாலும் குற்றவாளிக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கி தருகிறது.

    *உதாரணம்*

    ஒரு வழக்கில் பிணையில் விடுதலை அடைந்த ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருக்கும் போது பிணையில் விடதகா பிடியாணை பிறப்பிக்கப்பட்டு காவல் துறை அதிகாரி நிறைவேற்றும் போது மீண்டும் பிணையில் விடும் நீதிமன்றத்தை என்ன சொல்வது…

    அவன் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருப்பர் என்பது தான் கொடுமை..

    இது போல் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது..

    இவ்வாறு காலம் கடந்து விசாரணைக்கு வரும் போது. ..
    பாதிக்கப்பட்ட நபர் கூட சரியான முறையில் சாட்சி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வழக்கு விடுதலை அடைகிறது.

    🙏🙏🙏🙏
    இவை அனைத்தும் மாற வேண்டும்..

    அய்யா…

    🙏🙏🙏

    தாமதிக்க கூடிய நீதியும் அநீதி யே…🙏🙏🙏🙏

    இது என் தாழ்மையான கருத்து..🙏🙏🙏🙏

  6. அய்யா வணக்கம்

    குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமை வழக்குகளில் சம்பவத்திற்கு பிறகு சுமார் 5 ஆண்டு பிறகு வழக்கு விசாரணைக்கு வரும் போது பாதிக்கப்பட்ட அந்த பெண் திருமணம் ஆகி இருக்கும். அந்த சமயம் அவளுடைய கணவன் இடத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறிவிடுகிறார்கள்.,..

    வழக்கு முடிவு விடுதலை..

    குற்றவாளி * மீண்டும் அந்த குற்றத்தை செய்ய ஒரு புத்துணர்வு பெறுகிறான்….*

  7. கூலி படையினர் செய்யும் கொலை வழக்குகள்…

    இன்னும்

    ஒரு குற்றவாளிக்கு ஒன்பது வக்கீல்

    ஒருவர் வரவில்லை என்றாலும் வழக்கு அடுத்த வாய்தா…

    இவ்வாறு ஒவ்வொரு வாய்தவிர்க்கும் ஒரு குற்றவாளி ஏதாவது ஒரு வகையில் நீதிமன்றம் வருவது இல்லை.

    கொலை வழக்குகள் 20 ஆண்டுகளை கடந்து விசாரணையில் வழக்குகளும் காணப்படுகின்றன…

    *அரசன் அன்றே கொள்வான்*
    *தெய்வம் நின்று கொள்ளும்*
    என்பார்கள்

    இங்கு

    *நீதிமன்றங்கள் படுத்து தூங்கி விடுகின்றன*

    🙏🙏🙏🙏🙏

  8. Sir,
    தங்கள் பதிவை படிக்கும்போது தற்போது காவல் துறை எந்த அளவுக்கு மிக பின்னடைவு கொண்டு உள்ளது என்று தெளிவாக அறிய முடிகிறது.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தலை நிமிர்ந்த நிலையில் இருந்த துறை தற்போது அரசியல் அமைப்புக்களின் கைப்பாவையாக மாறி ,பணம், குறுக்கு வழியில் பதவி உயர்வு பெற்று பொது மக்கள் நலனை மறந்து, சுய நலமே பிரதானம் என்ற எண்ணம் கொண்ட அதிகார வர்க்கம் அதிகரித்து விட்டதின் விளைவுகள் காரணமாகவும்,நேர்மை ,சுய ஒழுக்கம் ,கட்டுப்பாடு,உள்ள நல்லவர்கள் இல்லாத அதிகார வர்க்கம் காரணமாக நாடு மிக மோசமான நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

  9. தற்போது பல அதிகாரிகள் (அனைத்து துறைகளிலும்) தாங்கள் எந்த நிலையில் இருந்து இந்த பதவிக்கு வந்தோம் என்பதை மறந்து , இந்த பதவி கொள்ளை அடிக்க கொடுத்த சந்தர்ப்பம் என நினைத்து ,ஒழுக்கம் இல்லாத நிலையில் பணி ஆற்றி வருகிறார் கள்,அதன் காரணமாக ஒவ்வொரு துறையும் மிகவும் கடுமையாக பின் அடைவு கொண்டு வருகிறது.
    அதனால் நாளை ஏற்பட போகும் விளைவு எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கும் என்பதை நாம் இப்பொழுது உணரவில்லை.
    கடவுள் தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

  10. Article revealing the exact position of Department. You alone have the courage to write this. Let us hope the article reach right persons and the department examine itself and improve.

  11. இதற்கு உளவியல் சார்ந்த சமூக அக்கறை கொண்டவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
    பதவியில் சேரும் போது அவர் நல் ஒழக்கம் உள்ள வரா,நேர்மையாக பணி ஆற்றும் திறன் உள்ளவரா , உழல் செய்ய பயப்படுவரா , நல் ஒழுககம் கொண்ட வரா என்று பார்த்து பதவி கொடுக்க வேண்டும்.வெறும் TNPSC,UPSC தேர்வில் மட்டும் பாஸ் ஆகிறது மட்டும் போதாது,உடல் திறனை விட உள்ளத்தில் நல்ல எண்ணம் உள்ள அதிகாரிகள் தான் தற்போது தேவை.
    நாட்டில் நடக்கும் பல உழல் ,தவறுகள்,இவர்கள் தான் காரணம் என நினக்க தொன்று கிறது.

  12. காவல்துறை மட்டுமல்ல நீதித்துறையும் அரசு குற்றவியல் துறையும் இணைந்து அரசுக்கு விசுவாசமாக செயல்பட்டால்தான் இதில் ஓரளவாவது வெற்றி காண இயலும் மேலும் இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்க விடும்போது காவல் துறைக்கு பின்னாளில் வேலைப்பளு கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு குற்றவாளிகள் குற்றம் நிருபிக்கப்படாமல் விடுவிக்கப்படும்போது சமுதாயத்தில் இது போன்ற குற்ற செயல்கள் செய்தால் பணம் செலவழித்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது அதனால் சதாரண குற்றம் செய்பவர்கள் கூட கொடுங்குற்றம் செய்ய தயங்குவதில்லை மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தார் கொலையாளிக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை நீதிமன்றம் கொடுத்து விட்டால் அவர்கள் சமாதானம் அடைந்து விடுவார்கள் அப்படி இல்லை என்றால் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தார்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுப்பதன் விளைவே காவல் நிலையத்தில் கையெழுத்து போடச்சென்றவர் கொலை நீதி மன்ற வளாகத்திற்குள் கொலை என்ற செய்திகள் இந்த பழிக்கு பழி தொடர்கதையாகி முடிவில்லாமல் செல்லும் இவையெல்லாம் காவல் துறைக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்க காரணம் ஆகும்

  13. Sir your stastics analysis is excellent.the root cause is corruption.those who have money easily gets escaped.poor face the trials.in our country laws are to be made strict.no adjournment of case more than 3 times should be permitted.here adjournment itself is for several times and several years.then judiciary reform is to be implemented.a trial court punishes and high court gives some other judgement and Supreme court then gives some judgement.then single judge delivered judgement is stayed bt bench in high court aswellas Supreme court.so all these consume moretime.police personnel who handled the cases might have been transferred and they lose interest.political cases took lot of time for delivery of judgement.2g,case is still going,money laundering and amassing of wealth by exFM is still going,Maran brothers who misused telecom machinery is still going.Even former CM case got final judgement after her death.so this is our country .All corporate customers who cheated banks and financial institutions are happily living in other countries.Honest officers are punished by transfers and denial of promotions and also they face lot of problems from their own colleagues and political masters.they are not able to do their duty.howmany will be like you sir.so human tendency is to be silent spectator.

  14. இன்றைய சமுதாயத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பல துறைகளும் இதில் அடக்கம். நீதித்துறையின் ெயல்பாடுகள் மந்தமாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள். ஒரு காலத்தில் 100-க்கு 90% மக்கள் நியாயமாகவும் லஞ்சம் (ம) ஊழலுக்கு எதிராகவும் இருந்தனர். தற்போது அது தலைகீழாக உள்ளது. அய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *